நீ ‍ தமிழனா? ‍

(இது ஒரு தமிழனின் உள்ளக் குமுறல்)

என்ன செய்தாய் நீ ‍ ‍தமிழனாகப் பிறந்து !
குற்றம் நடந்தது என்ன?

தமிழ்த்தாய் வாழ்த்து நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். அது  தமிழ்ப் பாட நூலின் முதல் பக்கத்திலேயே முடிய வேண்டுமாதமிழ் என்பது வெறும் 100 மதிப்பெண் பாடமாக மட்டுமே இருக்க வேண்டுமா?  Twitter/facebook/iphone தெரிந்த நமக்கு, அகநானூறு/புறநானூற்றுப் பாடல்களை ஒரு முறையாவது வாசித்திருப்போமா? பாரதி(யார்)  யார்? ஔவை (யார்)  யார்? வ்வினா நம் வாரிசுகளிடமிருந்து வரும் முன் விழித்தெழ வேண்டாமாஇவையனைத்தும் நான் என்னுள்ளே வினவும் வினாக்கள்.

மழலைகள் நடைமுறைப் பழக்க வழக்கங்களை பெற்றோர்களிடமிருந்தும், சுற்றத்தினிடமிருந்துமே அதிகம் கற்றுக்கொள்கிறார்கள். அத்தகைய பொறுப்பிலிருக்கும் நாம் நம் குழந்தைகளுக்கு தமிழின் சிறப்பை உணர்த்தத் தவறிவிட்டதாக உணர்கிறேன்.

யோசித்துப் பார்த்தால், என் குழந்தையின் தமிழ்வழிக் கல்வி கேள்விக்குறியே என்ற உண்மை புரிகிறது. இதற்குக் காரணம் நான் வெளி/வடநாட்டில் வசிப்பதனாலா? இன்றைய சூழ்நிலையில் ஆங்கிலத்தில் பேசும் குழந்தைகளை பாராட்டும் நாம், நம் தாய்மொழியின் சிறப்பைக் கூற மறந்தோமே! தாய்மொழிக்கல்வியா அல்லது ஆங்கில வழிக்கல்வியா (பிறமொழி வழிக்கல்வி) என்பது அவரவர் சொந்த விஷயம். அதை நான் இங்கு முன்வைக்கவில்லை. நாம் நம் பிள்ளைகளுக்கு தமிழின் சிறப்பை உணர்த்த வேண்டும்  என்றே வலியுறுத்துகிறேன்.  இதுவே தற்போது என்னுள் பரவியுள்ள ஐயம்.

யோசித்துப் பாருங்கள் !!

தந்தையாக நானும், தாயாக என் மனைவியும், என்னைப் போல் தொலைவிலிருக்கும் தமிழர்கள் ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும் !

நான் யாரையும் வெண்பா எழுதச் சொல்லவில்லை அல்லது அதற்கான விளக்கமும் கேட்கவில்லை ! அனைவரையும் ஒரு முறையாவது தமிழ் இலக்கியங்களை வாசிக்கப் பணிக்கிறேன். நான் பள்ளியில் படிக்கும் போது இத்தகைய  இணையதள வசதிகள் இல்லை. நூல்கள் எங்கு கிடைக்கும் என்பது தெரியவில்லை. ஆனால் இன்று பெரும்பாலான தமிழ்ப்புத்தகங்கள் இணையதளத்தில் (மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம், தமிழ் இணையக் கல்விக்கழகம்) இலவசமாகக் கிடைக்கின்றன. அதற்கான முயற்சிகளும் நடைபெற்றுருகின்றன. வாசிக்க நமக்கு விருப்பமா?

முந்தைய பதிவுகளில் அதற்கான இணையதள முகவரிகளை குறிப்பிட்டுள்ளேன்.

நான் எனது புத்தகம் படிக்கும் பழக்கத்தை என் தந்தையிடமிருந்தே கற்றுக் கொண்டேன். தமிழில் நான் வாசித்த முதல் புத்தகம் மறைந்த எழுத்தாளர் திரு. சாண்டில்யன் எழுதிய 'கன்னிமாடம்', இன்றும் நினைவில் உள்ளது.  பின் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், மணிபல்லவம், கடல் புறா, பாரதியார் கவிதைகள்உரைநடைகள் என்று வாசிக்கத் தொடங்கினேன். 

அன்று தொடங்கிய நான் இன்றுவரை புத்தக வாசிப்பை முடக்கவில்லை. அதிலிருந்து சிறது சிறிதாக சங்க இலக்கியங்களையும், வரலாற்றுப் புதினங்களையும் படிக்கும் முயற்சி தொடங்கிற்று. பின் சேர, சோழ, பாண்டியர்களைப் பற்றி படிக்கும் ஆர்வம் பிறந்தது. இன்றைய இணைய தளத்தின் உதவியால் தஞ்சை பெரிய கோவில், கங்கைகொண்ட சோழபுரம்  ஆகிய வரலாற்றச் சிறப்புமிக்க இடங்களைப் பற்றி மேலும் தெரிந்து கொண்டேன். தமிழினத்தின் மரபுபண்பாடு மற்றும் கலாச்சாரத்தின் சிறப்பை உணரத் தொடங்கினேன். அன்றிலிருந்துதான் நம் தமிழின் சிறப்பை உணர்ந்தேன். இத்தகைய தொன்மையான, செம்மையான தமிழ் மொழியின் சிறப்பை நாம் நம் பிள்ளைச் செல்வங்களுக்கு உணர்த்த வேண்டும்.  இது நம் அனைவராலும் இயலக்கூடிய ஒன்றே!!

இந்தப் பதிவின் மூலம் நான் எந்த ஒரு தனிநபரையும் குறைகூறவில்லை. நாம் என்ன செய்ய வேண்டுமென்ற கருத்தையே விளிக்கிறேன். தமிழில் இன்னும் நான் படிக்க வேண்டியவை, தெரிந்துகொள்ளவேண்டியவைகள் மிகுதியாக உள்ளன. தமிழை (தமிழில்) படிக்கப் படிக்க ஆர்வம் அதிகரிக்கிறது. தமிழ் நூல்கள் சேகரிப்பைத் தொடங்கியுள்ளேன். வருங்காலத்தில் இன்னும் எனக்குத் தெரிந்த பல அறிய தகவல்களை இவ்வலைப்பூவில் பகிர்வேன்.

முடிவில் தமிழின் இனிமையிலிருந்து நாம் விழகிச் செல்கின்றோமோ என்ற ஐயப்பாடு இருந்தாலும், நாமனைவரும் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும் என்று தோன்றுகிறது.

எனக்கு நம்பிக்கை உள்ளது, ப்பதிவினை வாசிக்கும் வாசகர்களில் ஒருவருக்காவது இது ஒரு தூண்டுதலாக அமையும் என்று!

4 comments:

  1. Kamalraju BalakrishnanJanuary 06, 2011

    Pinniviteergal Thiru.ArulMozhiVarman...Indrilirundhu Orkut/Facebook il Agananooru matrum purananoorin perumailgalai paraisatra ullen.............jus kidding...the article is good and the blog is nice to read..keep up the good work..

    ReplyDelete
  2. Hi Arun.. Just came across your blog.. Very beautifully expressed.. Admire your love towards Tamil.. Long way to go and all the very best!!

    ReplyDelete