http://www.tamilvu.org/
அறிமுகம்
உலகில் நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வாழும் தமிழர்கள் தங்களுடைய மரபுகளையும், விழுமியங்களையும், பண்பாட்டையும் பாதுகாக்க வேண்டும். இத்தேவையை நிறைவேற்ற அவர்கள் தங்கள் மொழி, கலை, இலக்கியம் இவற்றோடு நீங்காத தொடர்புடன் வாழ வேண்டும். உலகு தழுவி வாழும் தமிழ் மக்களின் பண்பாட்டுத் தேவைகளை மனத்திற்கொண்டு தமிழக முதல்வர் அவர்கள் 1999ல் நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டின் நிறைவு விழாவில், தமிழ் இணையப் பல்கலைக்கழகம் (த.இ.ப.) ஒன்று அமைக்கப்படும் என அறிவித்தார்.
அதை நிறைவேற்றும் வகையில் இத்தமிழ் இணையப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. த.இ.ப.ஆட்சிக்குழு ஒன்றால் வழி நடத்தப்பட்டு, ஒரு முழுநேர இயக்குநர் பொறுப்பில் செயற்பட்டு வருகின்றது. இது தற்போது தமிழ் இணையக் கல்விக்கழகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நோக்கம்
தமிழ் இணையப் பல்கலைக்கழகம் உலகு தழுவி வாழும் தமிழ் மக்கட்கும், தமிழில் ஈடுபாடு உள்ள மற்றையோர்க்கும், தமிழ் மொழியைக் கற்கவும், தமிழர் வரலாறு, கலை, இலக்கியம், பண்பாடு பற்றி அறிந்து கொள்ளவும், வேண்டிய வாய்ப்புகளை இணையம் வழியாக அளிக்கும் நோக்கத்தைத் தன்னுள் கொண்டது.
இந்த வலைதள மின்நூலகத்தின் பொருளடக்கம் பின்வருமாறு:
- நூல்கள் (LITERATURE):
Ø இலக்கணம்
Ø சங்க இலக்கியங்கள்
Ø பதினெண்கீழ்க்கணக்கு
Ø காப்பியங்கள்
சமய இலக்கியங்கள் சிற்றிலக்கியம்
நெறி நூல்கள்
சித்தர் இலக்கியங்கள்
20ம் நூற்றாண்டு இலக்கியங்கள் (கவிதை)
20ம் நூற்றாண்டு இலக்கியங்கள் (உரைநடை-சிறுகதை,
புதினம், கட்டுரை)
நாட்டுப்புற இலக்கியங்கள்
சிறுவர் இலக்கியங்கள்
- அகராதிகள்(DICTIONARIES)
- கலைக்களஞ்சியம்(ENCYCLOPEDIA)
- கலைச்சொல் தொகுப்புகள்(TECHNICAL GLOSSARY)
- சுவடிக்காட்சியகம்(MANUSCRIPT GALLERY)
- பண்பாட்டுக்காட்சியகம்(CULTURAL GALLERY)
இத்தகைய அரிய தமிழ்த்தொண்டு புரியும் அனைத்து தமிழர்களுக்கும் - என் இனிய வாழ்த்துக்கள். இது,
தமிழனாகப் பிறந்த நாம் அனைவரும் வாசம் செய்யவேண்டிய ஒரு
வலைப்பக்கம்.
என்றும் நம்மால் இயன்றவரை தமிழ் மணம் பரவச்செய்தல் வேண்டும்.
என்றும் நம்மால் இயன்றவரை தமிழ் மணம் பரவச்செய்தல் வேண்டும்.
good !!! கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .
ReplyDeleteவருகை செய்து பாருங்கள், தமிழ் மணம் பரவச் செய்வோம்.
Delete