படித்ததில் பிடித்தது

பாரதியார் பாடல்கள் - 1
  
நாட்டு வணக்கம்

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
   இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தைய ராயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
   முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையி லாயிர மெண்ணம் வளர்ந்து
   சிறந்ததும் மிந்நாடே ‍- இதை
வந்தனை கூறி மனதிலிருத்தி என்
   வாயுற வாழ்த்தேனோ - ‍இதை
வந்தே மாதரம், வந்தே மாதரம்
   என்று வணங்கேனோ!

No comments:

Post a Comment