சூப்பர் மார்க்கெட் போகணும் லேட் ஆகுது!!

”ஏய் உள்ளே என்ன பண்ற? சூப்பர் மார்க்கெட் போகணும் லேட் ஆகுது”.

“டூ மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க, நவீன் பாத்ரூம் போய்ட்டு இருக்கான்”.

“ஆமா வெளியில போகும் போது தான் அவனுக்கு எல்லாம் வரும்”.

“சரி, மறக்காம லாக் பண்ணி கீ எடுத்துக்கோ!”

சூப்பர் மார்க்கெட்டினுள் நுழையும் போது கதவிலிருந்த வந்த குளுமையான காற்று கோபியின் முகத்தில் பட்டது. தனக்கே உண்டான அவசர பாணியில் ஒருபுறமிருந்த தள்ளுவண்டியை உள்ளே தள்ளிச் சென்றான்.

”நவீன், உங்கப்பாவுக்கு பொறுமையே இல்லடா. எப்டி போறாரு பாரு”.

நவீன் தன் மழலை மொழியில், அப்பா பேட் ஃபெல்லோ என்று செல்லமாக சொன்னான்.

”காயத்ரி, பர்சேஸ் முடிச்சிட்டு நைட் அப்பிடியே ஹோட்டல்ல சாப்பிட்டுப் போலாம்”.

“ஓகே கோபி, இன்னைக்கு வீட்டு பக்கத்துல இருக்கிற நார்த் இண்டியன் ரெஸ்ட்ரன்ட்ல நாம சாப்பிட்டதே இல்ல, சோ அங்க ட்ரை பண்ணலாம்”.

உள்ளே நுழைந்தபின் எங்கு பார்த்தாலும் நியூ இயர் ஆஃபர், இதை என்னும்போதே கோபியின் கை பாக்கெட்டிலுள்ள கடன் அட்டையை தடவிச் சென்றது. ம்ம் இன்னைக்கு எவ்வளவு ஆகும்னு தெரியல, வழக்கம்போல ஃபோர் டிஜிட் போகாமிருந்தா சரி என்று எண்ணிக் கொண்டே சென்றான்.

“அப்பா, எனக்கு அந்த மெக்குயின் கார் வேணும். என்கிட்ட கிரீன் காரே இல்ல!”

“கடைக்கு வந்தா போதும் எப்ப பார்த்தாலும் இது அது வேணும்னு ஒரே டார்ச்சர். போன வாரம்தான் ஒரு கார் வாங்கின, அதுக்குள்ள இன்னோரு கார்…அப்பா சொன்ன பேச்சுக் கேட்டு சைலண்டா இரு, இல்லே நல்லா அடி வாங்குவே. வர வர உன் தொல்லை அதிகமாயிருச்சு”.

நவீன் கண்களில் கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது. அருகிலிருந்த சிறுவனின் கையிலிருந்த கார் பொம்மையை வெறித்துப் பார்த்தான்.

“டேய் ஏன் அழுதிட்டு இருக்க? கடைக்கு வந்தா சைலண்டா இருக்கமாட்டே நீ!” 

“அம்மா, அப்பா என்னை திட்டிட்டே இருக்காரு. நான் மெக்குயின் கார் கேட்டேன் அப்பா நோ சொல்லிட்டாரு”

”நவீன் மறுபடியும் அழுகையை ஆரம்பிக்காதே. ஒழுங்கா குட் பாய்யா இரு, அம்மா அப்பாகிட்ட சொல்றேன்”.

“கோபி உன்கிட்ட க்ரே கலர் சர்ட் இல்ல, இந்த சர்ட் பாரு ரொம்ப நல்லா இருக்கு”.

”ரெண்டு வாரம் முன்னாடிதான் ஒரு சர்ட் எடுத்தேன். ஆல்ரெடி நிறைய சர்ட் இருக்கு, சோ இப்ப வேணாம்”.

”நல்லாயிருந்தா எடுக்கவேண்டியதுதானே, அப்புறம் நாம தேடும்போது வேணுங்கிற கலர் கிடைக்காது”.
”ஒவ்வொரு தடவையும் இப்டியே வாங்கிட்டுடிருந்தா அப்புறம் அதுவே பழக்கமாயிடும். இதை பார்த்துத்தான் அவன் கத்துக்கிறான், எங்க போனாலும் அடம்புடிக்கிறது”

”சரி உன் இஷ்டம் வேண்டாம்னா எடுக்க வேணாம்”.

“வழக்கம்போல மறந்திட்ட!, அரிசி மாவு இல்லைன்னு ஞாபகப்படுத்த சொன்ன, மறக்காம எடுத்துவச்சிக்க. நான் பில்லிங்ல வெயிட் பண்றேன்”.

“கோபி இந்தா இதையும் பில் போட்டிரு”.

“ஏய் இதை எதுக்கு எடுத்திட்டு வந்தே! அவனே மறந்திருப்பான்”

“பாவம் அவன், ஒரு கார் தானே, இருந்திட்டு போகட்டும். புள்ளைக்கு வெளியில போய் விளையாட முடியல அட்லீஸ்ட் வீட்டுக்குள்ளே தானே இருக்கான். நெக்ஸ் டைம் நோ சொல்லிடலாம்”

”சரி நீ மூஞ்சிய தூக்கி வச்சிக்காத, அதை குடு நான் பில் போட்டுட்டு வரேன்”.

பில் பண்ணிவிட்டு தன்னுடைய சொகுசு காரில் ஹோட்டலுக்கு சென்றனர். இரவு முழுவதும் காரை வைத்து விளையாடிவிட்டு அசதியில் நவீன் தூங்கினான்.

அடுத்த நாள் காலை, கோபி பில்லை தேடிக்கொண்டிருந்தான்.

“என்ன தேடிட்டு இருக்க?”

“நேத்து வாங்கின பில்லைப் பார்த்தியா?”

”எதுக்கு தேட்ற, நேத்தே அதை பின்ல போட்டுட்டேன்”

“சூப்பர், அட்லீஸ்ட் கார் விலை எவ்வளவுனு பார்த்தியா?”

“இல்ல அப்டியே கவரோட போட்டுட்டேன்”

“வாங்கற நாமே விலையை பார்க்காம வாங்தித் தர்றோம். அப்புறம் புள்ளையே திட்டி என்ன பண்றது. யோசிச்சு பாரு நாம சின்ன வயசில இப்படி பார்த்ததெல்லாம் வேணும்னு அடம்புடிச்சிருப்போமா? அப்ப நமக்கு காசோட வேல்யூ தெரியும், அப்பா அம்மா சொல்லி சொல்லி வளர்த்தாங்க. இப்ப நிலைமையே வேரே, வேணுங்கிறத இப்பிடியே வாங்கிக் குடுத்திட்டு இருந்தா அவனுக்கு காசோட அருமையே தெரியாது. பெரியவனானா அவனுக்குத்தான் கஷ்டம்”

“ஆமா கோபி, நானும் இப்பத்தான் ரியலைஸ் பண்றேன். சரி இனி ஸ்லோவா நாமதான் சொல்லித்தரணும்”.


என்ன wifeகூட சண்டையா?

7.30PM

ஏன் போன் எடுக்கல, வெளியே போயிருந்தியா! எத்தனை தடவ சொல்லியிருக்கேன். ஏதாவது எமர்ஜென்ஸினா என்ன செய்றது. நீ படிச்சவதானே உனக்கு சொன்னா புரியாதா? ச்சே….”
கார்த்திக் இப்ப எதுக்கு டென்ஷனாகிற, என்னேரமும் போன் கையிலியே வைச்சிருக்க முடியாது. சரி இதை சொல்றதுக்குத் தான் போன் பண்ணியா, போன் பண்ணா எப்பவாவது நல்லா பேசிருக்கியா. உன் ஆபீஸ் பிரச்சனையே என்கிட்டதான் காட்றதுரெண்டு மாசமா வீட்டில இருக்கேன், எப்படி இருக்கேன், நல்லா இருக்கேனான்னு கொஞ்சம் அன்பா கேக்கிறியா? அதெல்லாம் விட்டுட்டு சும்மா கத்தாதே

ஏய் நானா கத்தறேன்? ஏண்டி போன் எடுக்கலைன்னு கேட்டா, நீ என்னை திட்டிறஅப்படியே உங்க அம்மா வீட்டிலேயே இரு, திரும்பி இங்க வந்தராதே. போன் பண்ணினாலும் ப்ராப்ளம் இல்லைனாலும் ப்ராப்ளம், ஒன்னும் புரியல..கல்யாணமாகி இரண்டு வருஷமாச்சு இன்னும் நீ என்னை புரிஞ்சுக்கவேயில்ல. டெய்லியும் FB, whatsapp மட்டும் கரெக்டா செக் பண்ணு, ஏன் call எடுக்கலேனு கேட்டா என் மேல எரிஞ்சுவிலற

நான் பேஸ்புக் status சேஞ்ச் பண்றதான் உனக்கு பிரச்சனையா? அப்ப அத சொல்லவேண்டியது தானே, எதுக்கு சுத்திவளைக்கிற. ஒரு சின்ன பிரச்சனையே எப்டி சால்வ் பண்றதுனு தெரியலே. மொதல்ல கோபத்தை கண்ட்ரோல் பண்ணு. உங்கிட்ட இதுக்குமேல பேச முடியாது, பேசினா பிரச்சனை தான் வரும். நான் போன் கட் பணறேன்

ஏன் சொல்ல மாட்டே, எல்லாம் என் நேரம். சரி உனக்கு எப்ப பண்ணணும்னு தோனுதோ அப்ப பண்ணு, BYE.”

ஊருக்கு போய் ரெண்டு மாசமாச்சு, இவ கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கட்டும்னு அனுப்பிவச்சா இப்ப அதுவே பிரச்சினையா இருக்கு.

8.00PM

ரமேஷ் எங்கடா இருக்கே? ஃப்ரீயா இருந்தா வீட்டுக்கு வா..சரக்கு அடிக்கலாம்.”

டேய் பொறம்போக்கு, இன்னைக்குதான் உனக்கு outgoing ஆக்டிவேட்ஆச்சா? கால் பண்ணா busy, meetingனு சொல்லுவ இல்ல petrol போடபோனேன்னு சப்பக் காரணம் சொல்லுவ, இப்ப நீயே பண்ற. சரி என்ன சொல்லு.”

சும்மா தான் கால் பண்ணேன், நைட் வீட்டுக்கு வாசரக்கடிச்சு ரொம்ப நாள் ஆச்சு

என்ன wifeகூட சண்டையா? என்னடா நெனச்சிட்டு இருக்கே, உனக்கு ஏதாவது ப்ராளம்னா உடனே என் ஞாபகம் வருது. அதுவும் தண்ணி அடிக்கணும்னா வரும், very bad. மச்சான் நீ ஒரு போன் பண்ணமாட்டே, ஒரு டீ கூட வாங்கித்தரமாட்டே, ஆனா பேஸ்புக்ல – Missing friends so badlyனு ஸ்டேடஸ் போடுவ..டேய் போதும்டா, சரி இன்னும் ஒன் ஹவர்ல வர்றேன்

10.00PM

டேய் வெயிட் பண்ணுடா, வர்றேன். உள்ளே வா

வீடு என்னடா குப்பையா இருக்கு. உன் வைஃப் இருந்தப்ப எவ்வளவு க்ளீனா இருந்துச்சு. சரக்கு எங்க ஃப்ரெட்ஜ்ல இருக்கா?”

இல்லடா, இனிமே தான் வாங்கணும்

டேய் லூசா நீ, சொல்லிருந்தா நான் வாங்கிட்டு வந்திருப்பேன்

சும்மா சொன்னேன் மச்சான், உள்ளதான் இருக்கு வெயிட் பண்ணு நான் எடுத்துட்டுவர்றேன். சனிக்கிழமை .ஃப்ரியா? ’படத்துக்குப் போலாமா? சூப்பரா இருக்குன்னு ஆஃபீஸ்ல சொன்னாங்க. நாளைக்கே புக் பண்றேன். சரி க்ளாஸ் எடு

மச்சான் மேட்டர்க்கு வா..ப்ரியாவோட பிரச்சனையா?”

அப்படியெல்லாம் எதுவும் இல்ல, ரொம்ப நாளாச்சு அதான் கூப்டேன். ரொம்ப பண்ணாதடா, என்னைப்பத்தி உனக்கு நல்லா தெரியும்.”

டேய் தெரிஞ்சதனாலதான் சொல்றேன். Ok, ஏதோ பிரச்சனைன்னு தெரியுது...ஏற்கனவே குழந்தை இல்லைன்னு உங்கம்மா அவளைத் திட்டிட்டு இருந்தாங்க. இப்ப நீயும் சண்டைபோட்டேனா அவ என்ன செய்வா, கொஞ்ச நாளைக்கு அட்ஜஸ்ட் பண்ணுடா எல்லாம் சரியாயிடும்

இந்தப் பிரச்சனைக்குத்தான் அவள அவங்க அம்மா வீட்டில கொஞ்ச நாள் இருந்துட்டுவான்னு சொன்னேன். இப்ப அதுவே பிரச்சனையாயிருச்சு. போன் பண்ணா அட்டண்ட் பண்ணல ஏன்னு கேட்டா, என்னைத் திட்ரா..போதும்டா சாமி சரியான டார்ச்சர் ஏன்டா கல்யாணம் பண்ணினேன் இருக்கு. இரண்டு வருஷமாச்சு இன்னும் புரிஞ்சுக்கவேயில்லஅப்படியே போய்ட்டிருக்கு.”

மச்சான் இதெல்லாம் நார்மல்டா, எதுக்கெடுத்தாலும் டென்ஷன் ஆகாதே

இங்க எங்கம்மாடாக்டர பாரு, அவள மருந்து சாப்பிட சொல்லு, கோயிலுக்குப்போ சொல்லுன்னு டெய்லியும் தொல்லை. நம்ம ஃபேமிலில எல்லாருக்கும் குழந்தையிருக்கு, நம்ம வீட்டிலதான் அதுக்கு கொடுப்பினை இல்லைன்னு சொல்லி டார்ச்சர் பண்றாங்க. சரி அம்மாதான் இப்படினா, ப்ரியா அதுக்குமேல ஒரே ஈகோ, மெச்சூரிட்டியே இல்ல! இப்படியே இருந்தா பைத்தியம்தான் பிடிக்கும்

டேய் போன் அட்டண்ட் பண்ணலேனா உடனே எல்லா தப்பாயிருமா? அவளுக்கு என்ன பிரச்சனையோ, வீட்டில இருந்திருக்கமாட்டா

நான் மீட்டிங்லிருந்தாக்கூட அவ கால் பண்ணா அட்டண்ட் பண்றேன். அவளுக்கு இந்த எண்ணமே வரமாட்டேங்குதடா…”

எல்லாம் சரியாயிடும் மச்சான். டைம்மாச்சு நான் கிளம்பறேன், சும்மா யோசிசிட்டு இருக்காதே. காலைல போன் பண்ணு, குட்னைட்

 10:00AM

ஹலோ கார்த்திக் எங்க ஆஃபீஸ்ல இருக்கியா, காலைல சாப்பிட்டியா.”

இதைக் கேட்கிறதுக்குத்தான் போன் பண்ணியா, எனக்கு வேலை இருக்கு. ஏதாவது ம்பார்ட்டண்ட்னா சொல்லு நான் மீட்டிங் போகணும்.”

இல்லடா சும்மாதான் கூப்பிட்டேன், பிஸியா இருந்தா ஈவினிங் கால் பண்ணு

“Bye”

7.00PM

ஏய் ப்ரியா என்னதாண்டி பண்ற, எவ்ளோதடவை கால் பண்றது. 20 தடவ கால் பண்ணியாச்சு, எங்கதான் போயோ!…ச்செய். என்னை நிம்மதியாவே இருக்கவிடமாட்டே. தயவுசெஞ்சு போன் அட்டண்ட் பண்ணித்தொல!

8.00PM

Switched off!

கார்த்திக் ப்ளீஸ்டா ஒரு டைம் அட்டண்ட் பண்ணுடாப்ளீஸ்டா!!

10.00PM

Switched off!

 7.00AM

30 Missed calls from Priya

Msg: “Sorry da, evening hospital pooyirunthen  adhanale phone yeduthitupogala da…plz karthik. Intha oru time mannichiruda…I know I made a mistake…u told me many times but I forgot to take the mobile with me…plz karthik..wanna say some good news...can’t write it in message…call pannuda…I am waiting for your call…plz da…I love you”

10.00AM

மச்சான் நைட் கால் பண்ணினேன் switch off லே இருந்துச்சு….என்ன பிரச்சனை..  ட்க்கெட் புக் பண்ணிட்டியா?”

சாரிடா டென்ஷன்ல மறந்திட்டேன், ஈவினிங் பண்றேன்

என்னடா மறுபடியும் பிரச்சனையா?”

ஆமா அவதான் எனக்கு பிரச்சனையே, கால் பண்ண சொன்னான்னு செஞ்சா அட்டண்ட் பண்ணல…20 தடவ பண்ணிடேன். இதே வேலையா போச்சு அவளுக்கு, இந்த தடவ அவளா சாரி சொல்றவரைக்கும் நான் பேசமாட்டேன்..அதான் swtich off செஞ்சேன்

டேய் கார்த்திக் இதுல என்னடா ஈகோ! நீயும்மா அவள புரிஞ்சுக்கமாட்டே? பெட்டர் நேர்ல போய் பாரு, நீ அங்கபோய் ரொம்ப நாள்ளாச்சுபோன்ல பேசினா ப்ராப்ளம்தான் வரும்

இல்லடா, இந்த தடவ நான் எதுவும் செய்யப்போறதில்ல..”

3.00PM

கார்த்திக் நைட் ஃபுல்லா உனக்கு ட்ரை பண்ணிட்டே இருந்தேன். 12 மணிக்குத் தான் தூங்கினேன். சரி இப்ப ஃப்ரீயா இருக்கியா, லன்ச் சாப்பிட்டியா?”

ஏய் உனக்கு என்னதான் வேணும்எனக்கு வேலையிருக்கு, நான் கட் பண்றேன்

டேய் சாரிடாஎன்னை திட்டாதஇந்த ஒரு டைம் மன்னிச்சிருடா.. ஃப்ளீஸ்உன்ன இப்ப பார்க்கணும்ன்னு ஆசையா இருக்கு

எதுக்கு இப்ப பார்க்கணும், எனக்கு டைமாயிட்டுருக்கு

ம்ம்ம் எனக்கு வெட்கமா இருக்குடா….உன்கிட்டதான் ஃப்ர்ஸ்ட் சொல்லலும்னு நெனெச்சேன். அதான் ஹாஸ்பிடல்லிருந்து வந்ததும் கால் பண்ணினேன்....டாக்டர் கன்ஃபார்ம் பண்ணிடாங்க!!!”

என்ன சொல்ற, எனக்குப் புரியல…”

டேய் லூசு, சரியான ட்யூப்லைட் நீ

வாவ் ப்ரியாநிஜமாவா? I am so happy…I love you so much…இப்பவே உன்னைப்பார்க்கணும். ஈவினிங் கிளம்பறேன், கோபத்தில ஏதேதோ பேசிட்டேன்சாரி டீநான் தான் உன்னைப் புரிஞ்சுக்கல

ஏய் அதெல்லாம் வேண்டாம், weekend இங்க வந்தாபோதும், ரெண்டு நாள்தான் இருக்கு..பொறுமையா வா….. சரி அத்தைக்கு இன்னும் சொல்லலஎனக்கு கூச்சமா இருக்குநீயே சொல்லிறியா?”

நான் சொல்றதவிட நீ சொன்னா ரொம்ப சந்தோஷப்படுவாங்கஇப்பவே நான் ஆஃபீஸ்ல லீவ் சொல்லிட்டு கிளம்பறேன்

ஓகே டா, நான் அத்தைக்கு கால் பண்ணிசொல்லிடறேன்…Miss you so much Karthik…I love you”

இனிதான் நீ நல்லா ரெஸ்ட் எடுக்கணும், போனை சைலண்ட்ல வைச்சிட்டு கொஞ்ச நேரம் தூங்குரொம்ப ஹேப்பியா இருக்கேன்…love u so much dear…take care!!!”