பயணத்தின் முதல் பதிவு

தமிழ்த்தாய்க்கு என் முதற்கண் வணக்கம்.

"நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில் 
தெக்கணமும்  அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! தமிழணங்கே!

உன் சீரிளமைத் திறம்வியந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!

தொடக்கத்திலேயே தடுமாற்றம். என்னதான் தமிழ்த் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றிருந்தாலும், இங்கு கணினியில் தட்டச்சு  செய்வதில் ஏராளமான பிழைகளெழுந்தும் என்னைத் தொடர்ந்து  எழுதத் தூண்டும் தமிழுக்கு நன்றி !

இணையத்திற்கு இரண்டாம் நன்றி !!

தமிழ் இணையதள வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் நன்றி !!!

எனக்குப் பிடித்த சில வரிகள் பின்வருமாறு;

``யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்கும் காணோம்``

``செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே``

பிழைகளைத் திருத்தி என் தமிழ்ப்பயணத்தைத் தொடங்குகிறேன்.
 

நன்றி,
அருள்மொழிவர்மன்

2 comments:

 1. பயணம் சிறப்புற எமது வாழ்த்துகள்
  தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

  ReplyDelete
  Replies
  1. நண்பரின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி!!!

   Delete