என்னைப் பற்றி

நிழற் பெயர்: அருள்மொழிவர்மன் 

நிஜப் பெயர்: வெ. அருண்

தமிழனாய் பிறந்து, தொழிற்நகரமான திருப்பூரில் பள்ளிக்கல்வியும், கோவையில் பொறியியல் பட்டப்படிப்பும் முடித்து தற்போது வளைகுடா நாட்டில் எண்ணெய்வளத் துறையில் பணியாற்றி வருகிறேன்.

அன்னையின் செல்வனாய், தந்தையின் சிற்பமாய், மனைவியின்  மந்திரப்புன்னகையில், தமிழ் சுவாசியாக இணையத்தில் உலா வருகிறேன். நான் பார்த்தவைகளையும், படித்தவைகளையும், கேட்டவைகளையும் உங்களோடு இங்கு பகிர்ந்துகொள்கிறேன். 

எனது எண்ணச்சிதறல்களையும், நான் உணர்ந்த நிழலுலக நிஜங்களையும் எனக்குத் தெரிந்த தமிழில் இந்த டிஜிட்டல் பதிவுலகில் பதிக்கிறேன்.

என் எண்ணங்களுக்கும், எழுத்துக்களுக்கும் வரைமுறை இல்லை! இவ்வலைபூவில் குறிப்பிட்டவையனைத்தும் என் சொந்தக் கருத்துக்களேயாகும், யாரையும் புண்படுத்தும் நோக்கில் பதிக்கப்படவில்லை.

வாசகர்களின் விமர்சனங்களும் கருத்துக்களும் வரவேற்கப்பட்டுகின்றன! பிழைகளைச் சுட்டிக்காட்டும் நண்பர்களுக்குக் கூடுதல் நன்றி!

இவ்வலைபூவிற்கு விஜயம் செய்த அனைத்து வாசகர்களுக்கும் நன்றி கூறி என் தமிழ்ப்பயணத்தை இனிதே தொடர்கிறேன் !!!!


அன்புடன்
அருள்மொழிவர்மன்

No comments:

Post a Comment