கர்வம்

ஒரு வகையில் நாம் அனைவரும் கர்வம் உள்ளவர்களாகவே பிறந்துள்ளோம். ஏனெனில் பிறக்கும்போதே தாய்க்கு "அம்மா" என்ற பதவியையும், தந்தைக்கு "அப்பா" என்ற பதவியையும் அளித்துள்ளோம். அன்று தொடங்கிய கர்வம் சில நேரங்களில்/ நிலைகளில் நம் உடன்பிறப்பாக தொடர்ந்து வருகிறது.

படித்தவனுக்கு படித்ததில் கர்வம். தூங்குபவனுக்குத் தூங்குவதில் கர்வம். ஆணுக்கு ‍தான் ஒரு ஆண் என்பதில் கர்வம். பெண்ணுக்கு தான் ஒரு பெண் என்பதில் கர்வம். மனிதனுக்கு மனிதன் என்பதில் கர்வம், அதுவே ஒரு மாட்டிற்கு தான் ஒரு மாடு என்பதில் கர்வமோ!!! (இருக்கலாம்). தேர்வில் பாஸ் செய்தவனுக்கு தேர்ச்சி பெற்றதில் கர்வம்.  தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றவனுக்கு தரவரிசையில் கர்வம்.

பொதுவாக‌ நமக்கு தமிழன் என்பதினால் கர்வம், அயல்நாட்டவனுக்கோ அவன் அயல்நாட்டவன் என்பதில் கர்வம்.

இக்கூற்றுகளிலிருந்து கர்வம் என்பது ஒருவரின் தன்னியியல்பாகவே தோன்றுகிறது. ஆக ஒவ்வொரு நிலையிலும் ஏதோ ஒருவிதத்தில் கர்வம் இருந்து கொண்டே வருகிறது. 

உதாரணமாக, செல்வந்தனுக்கு தனக்குக்கீழ் மற்றவர்கள் உள்ளதால் கர்வம். நடுத்தர நிலையிலிருப்பவனுக்கு அவனுக்குக் கீழே மற்றும் சிலர் உள்ளதால் கர்வம். ஆனால் கடைசியில் கீழே இருப்பவனுக்கு யாருடனும்  ஒப்பிடுதல் இல்லையென்று சொல்லிவிட முடியாது. அவனுக்கோ தான் செல்வந்தனைவிட நிம்மதியாக இருப்பதால், நிம்மதியில் கர்வம் உள்ளவனாக இருப்பான். முடிவில் கர்வம் உள்ளவனுக்கு தான் வெளிப்படையாக வெற்றி பெற்றதாகத் தோன்றினாலும், முடிவில் ஒரு மறைமுக தோல்வி உள்ளதை மறுக்க முடியாது.

கடைசியில் இறந்த பிறகும், தம் உடலை பிறர் சுமப்பதினால் மீண்டும் கர்வம் பிறக்கிறது. இவ்வாறு மனிதனுக்கு தான் பிறக்கும்போது தோன்றிய கர்வம், இறக்கும்போதும் இருப்பதை உணரமுடிகிறது.

No comments:

Post a Comment