அம்மா


நான் க‌ண் திறந்து பார்த்த முதல் பெண் என் அம்மா
நான் கண் திறக்கக் காரணமும் அவளே !"

"அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே 
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம், பெற்ற தாயின்றி வேறொன்று ஏது"
உண்மை, எனது பார்வையில் ‍அம்மாவை வணங்காது உயர்வில்லை!


                                                  என் அம்மா

என்பிறப்பில் மறுபிறவி எடுத்தாள்
அவள் செந்நீரை சொட்டச் சுவைத்தேன் - அன்றும் உணரவில்லை ‍
நிலாச்சோறுடன் அவள் விரல்‍சோற்றையும் சுவைத்தேன் - அன்றும் உணரவில்லை
மழலைநடை பழக்கிய அவள் பாதம் நோகச்செய்தேன் - அன்றும் உணரவில்லை

நித்திரையில் நிழலாக நின்றாள் - அன்றும் உணரவில்லை
கல்லூரி கலாட்டாவில் அவள் கவலையை மறந்தேன்‍ - அன்றும் உணரவில்லை
திருமணத்திற்குப் பின், தொலைவில் நின்று தொலைபேசியில் சுகம் விசாரித்தேன் - அன்றும்உணரவில்லை
உணர்ந்த தருணம், அருகில் நின்று அம்மா எனஅழ - அடுத்த விடுமுறையை எதிர்நோக்கினேன்!

உன்னிடம் கேட்கும் வரம் ஒன்றே -‍ மறுபிறவியிலும் உன் மகனாகப் பிறக்கின்ற வரம் கொடம்மா, என் கண்ணீரால் உன் பாதம் கழுவ!!!

5 comments:

  1. உணர்வுள்ள படைப்பு...... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வாழ்த்துக்களுக்கு நன்றி ‍திரு. சி. கருணாகரசு மற்றும் மதுரை சரவணன்..
    இது போன்ற நண்பர்களின் ஊக்குவிப்பே, தமிழில் இன்னும் பல புதிய படைப்புக்களை எழுதத் தூண்டுகின்றன.

    ReplyDelete
  3. Replies
    1. @ முல்லை அமுதன், வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

      Delete