கனவே கலையாதே


இரவில் இன்பம்தரும் உன் விரல்கள்
பகலில் விலகிப் போக
வருத்தமொன்றே விருப்பப்பாடமாக எடுத்த எனக்கு
மறுஇரவு முழுநிலவாகுமோ!
 


கனவில் கருங்கூந்தல் கலைய
கண்ணிமைகள் காவியம் புனைய
கைவிரல்கள் கவி பாட
வெண்கழுத்து வெட்கத்தில் சிவக்க
செவ்விதழ்கள் சுவை சொட்ட
வியர்வையில் துவண்ட உன் எழிலுக்கு
துகில் கலைக்க வந்த என் கைகள்
காற்றில் கலந்தது!
விலகும் உன் பெண்ணியம் கண்டு.
 

2 comments:

  1. என் இதயம் பூரிக்கின்றது இதை படிக்கும் வேலையில் உன்னிடம் இருப்பது காதலா இல்லை அதனினும் புனிதமானதா
    நன்றி நண்பா

    ReplyDelete
  2. பின்னூட்டத்திற்கு நன்றி விவேக் !

    ReplyDelete