ஆம், நாம் பேசுவதை
நிறுத்தி இன்றுடன் மூன்று நாட்களாகிறது. மனதிலிருப்பதை உன்னிடம் சொல்லிவிட
வேண்டும் என்று எண்ணியிருந்தேன், ஆனால் அதை எப்படிச் சொல்வது
என்பதில் குழப்பம் நீடிக்கிறது. நீ அன்று அப்படிச்
சொல்லியிருக்க வேண்டியதில்லை, அதனால் உண்டான ஏமாற்றத்தை விட
வலியே அதிகம்.
அன்று நடந்தது உனக்கும் ஏமாற்றத்தை அளித்திருக்கும் என்பதை
உணரமுடிகிறது. கடந்து சென்ற இந்த நாட்களில் ஓரிரண்டு வருடங்கள் உருண்டோடிச் சென்றதாக
உணர்கிறேன். எனது பலவீனத்தைத் தெரிந்திருந்தும் அதை நீ சொல்லியது மன்னிக்க
முடியாததாகத் தோன்றுகிறது. இதை கடந்து செல்ல நினைக்கும் போதெல்லாம் பலவீனத்தை உணர்கிறேன். தவறான ஒன்று சரியாக வாய்ப்பேயில்லை என்பது மட்டும் உறுதியாகத் தோன்றுகிறது.
உன்னுள்
எழுந்த பாதிப்பை என்னால் முற்றிலும் உணர முடியவில்லை, உன்னை புரிந்துகொள்ள முற்படும் போதெல்லாம் ஏமாற்றமே
மிஞ்சுகிறது. இத்தனை வருடங்களுக்குப் பிறகும் அது தொடர்வது
வருத்தமாக உள்ளது. ஆனால் என்னைப் பற்றி நீ நிச்சயம் புரிந்து
வைத்திருப்பாய் என்று எண்ணியிருந்தேன். உனது மௌனத்தைப் பழக்கப்படாத எனக்கு,
நெருப்பில் நிற்பது போல் தோன்றுகிறது. என்னுள் எழும் இதுபோன்ற
தருக்கங்கள் உன்னுள்ளும் நிகழ்ந்திருக்குமா ?
ஒருசில நேரங்களில் நம்முள் உருவாகும் கோபமே முடிவை நிர்ணயிக்கிறது. பின்னர் அந்த
முடிவை நியாயப்படுத்த முயலும் போதெல்லாம் மனதில் பிடிவாதம் குடிகொள்கிறது. இறுதியில் இதுபோன்ற அவரச முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத்
தள்ளப்படுகிறோம்.
இதுவும் கடந்து செல்லும், காலம் தான் இதற்கான ஒரே மருந்து !
இந்த நிலை மாறும்...!
ReplyDeleteநண்பருக்கு வணக்கம், வரவுக்கு நன்றி.
ReplyDeleteகற்பனையாக எழுதியது. .
தம்பி இது எதோ லவ் லெட்டர் மாதிரி தெரியுது ... தமிழ் வளர்க்கிறேன்னு சொல்லிபுட்டு எதோ லவ்வ வளக்றாப்ல தேரியுது ... கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .
ReplyDelete@ ஜட்ஜ்மென்ட் சிவா, நண்பருக்கு வணக்கம்.
Deleteநாம எதுவும் இங்க புதுசா சொல்லித்தர வேண்டியதில்லை, இளவட்டங்களுக்கு அது நல்லாவே தெரியும். ஆண், பெண் இருவருக்குள் நிகழும் பனிப்போரைக் கற்பனை கலந்து எழுதினேன். இது காதலர்களுக்கு மட்டுமல்ல, திருமணமானவர்களுக்கும் பொருந்தும்.
அருமை
ReplyDelete@ மகேஸ்வரன், வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.
Deleteஅருமை
ReplyDeleteNattu Marunthu Kadai