ஜுலை 27, இன்று முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு
நாள் அனுசரிக்கப்படுகிறது.
‘நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க
வேண்டும்’. இந்த மண்ணில் பிறந்த அனைவரும் மகான் ஆவது கிடையாது, தகுதியுடைய ஒரு
சிலருக்கு மட்டுமே அந்த பேறு கிட்டுகிறது. அவர்களிலும் ஒரு சிலரை மட்டுமே இவ்வையகம் நினைவில்
வைத்துப் போற்றிக் கொண்டாடுகிறது.
‘கனவு
காணுங்கள்! ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல, உன்னைத் தூங்கவிடாமல் செய்வதே
கனவு.’ இன்றைய இளைஞர்களை இவரை விட அதிகமாக நம்பியவர்கள் கிடையாது. இளைஞர் சக்தியின்
மூலம் இந்தியா வல்லரசாக முடியும் என்பதை கனவாகக் கொண்டிருந்தார். ஆனால் நம் இளைஞர்களின்
செயல்களை அவர் இன்று கண்டிருந்தால் நிச்சயம் வேதனையடைந்திருப்பார். சினிமா நடிகர்,
நடிகைகளை முன்மாதிரியாகக் கொண்டு அவர்களுக்காக தங்களது வாழ்நாளின் நிமிடங்களைச் செலவழிப்பது
வெட்கப்பட வேண்டியவொன்று.
சென்னையில்
ஓரிரு தினங்களுக்கு முன்பு நிகழ்ந்த பேருந்து நாள் கொண்டாட்டமும், பச்சையப்பன் கல்லூரி
மாணவர்களுக்கிடையில் நடந்த அரிவாள் சண்டையும் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிகழ்வுகள.
இதுபோன்ற
இளைஞர்களுக்கு மத்தியில், ஒரு சிலர் கலாம் அய்யாவை முன்மாதிரியாகக் கொண்டு தம்மால் இயன்ற நற்செயல்களை
ஆரவாரமில்லால் சாதித்து வருகின்றனர் . உதாரணத்திற்கு சென்னையைச் சேர்ந்த கலை அரசன் என்ற
ஆட்டோ ஓட்டுனர், கலாமின் நினைவு நாளான இன்று பொதுமக்களுக்கு இலவச சேவையை வழங்கி வருகிறார்.
இதுபோன்ற இளைஞர்களின் செயல்கள் நிச்சயம் பாராட்டுதலுக்கும் வணக்கத்திற்கும் உரியது.
இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதை நிறுத்தி, வாழ்க்கையை
மேம்படுத்த உதவும் கனவுகளைக் கண்டு, அக்கனவுகளை நனவாக்கும் முயற்சியில் ஈடுபவது
மட்டுமே அவரை நாம் பின்பற்றுவதற்குச் சான்றாகும்.
APJ
– WE MISS YOU SIR !
படம்: கூகிள்
ஒரு நல்ல மனிதரை இந்த நாடு இழந்து விட்டது. இன்றைய இளைஞர்கள் நிலை கவலை அளிக்கிறது.
ReplyDeleteநல்ல பகிர்வு நண்பரே. வாழ்த்துகள்.
நண்பரின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி!
Deleteநீங்கள் குறிப்பிட்டது சரிதான், இளைஞர்களின் நிலை மிகவும் கவலையளிப்பதாக இருக்கிறது. மேலும் அவர்களிடையே பொருள்சார் மீதான ஈர்ப்பும் போலியான வாழ்க்கை முறையும் அதிகரித்து வருவதாகத் தோன்றுகிறது.
கலாம் ஒரு கலங்கரை விளக்கம், காலம் நமக்களித்த அருட்கொடை. கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .
ReplyDeleteதாங்கள் குறிப்பிட்டது முற்றிலும் உண்மை. ஐயாவின் மறைவு நாம் அனைவருக்கும் ஒரு பேரிழப்பு!
Delete