காஞ்சி இருக்கக் கலிங்கம் குலைந்து (சிலேடை)


"காஞ்சி இருக்கக் கலிங்கங் குலைந்த
        கலவி மடவீர் கழற்சென்னி
காஞ்சி இருக்கக் கலிங்கங் குலைந்த
   களப்போர் பாடத் திறமினோ"

இது கலிங்கத்துப் பரணியில் புலவர் செயங்கொண்டார் கடைத்திறப்பு என்ற பகுதியில்அமைத்த பாடலின் வரிகள்இதுவே மறைந்த சரித்திர நாவலாசிரியர் திரு. சாண்டில்யண் அவர்களின் வரலாற்று நாவல் "கடல் புறா"வின் முதல் வரி.

இணையதள தமிழ்வாசகர்களே செந்தமிழின் சிறப்பை இங்கே உற்றுநோக்குங்கள், சிலேடை தெரிந்தவர்களுக்கு இவ்வரிகளின் பொருள் விளங்கும்.

ஆசிரியர் செயங்கொண்டார் உரைக்க விளிவது, குலோத்துங்க சோழன் காஞ்சியில் தங்கி இருக்க அவனது ஆணையின் பேரில் அவனது படைகள் கலிங்கத்தை அழித்தன

இதன் இன்னொரு பொருள் பின்வருமாறு - காஞ்சி என்பது மகளிர் இடையில்  அணியும் ஒரு ஆபரணம், கலிங்கம் என்பது உடுத்தும் ஆடை. இதுவே மகளிர் தத்தம் கணவருடன் கலவியில் (கலவிப்போரில்) இருக்கும்போது ஆபரணம் இருக்க ஆடை கலைந்தது.

மகளிர் நடத்திய கலவிப்போரையும், கலிங்கத்தில் கழற்சென்னியான குலோத்துங்க சோழன் நடத்திய ஆயுதப்போரையும் புலவர் சிலேடையாகப் பாடியுள்ளார்.

மேற்கூறப்பட்ட கலிங்கப்போரை குலோத்துங்கன் தன் படைத்தலைவனான கருணாகரத் தொண்டைமான் தலைமையில் படை நடத்திப் பெற்ற மாபெரும் வெற்றியைப் பற்றி விளக்கும் நூலாகும். கருணாகரன் குலோத்துங்க சோழனின் நெருங்கிய நண்பணாவான், இவனே கடாரத்தையும், விஜயநகரத்தையும் குலோத்துங்கன் ஆணையின் பேரில் வென்று, அவ்விரு நாட்டிலும் நல்லாட்சி மலரச் செய்தான். இராஜராஜ சோழன் ஆட்சியில் பெருகிய  கிழக்கத்திய நாடுகள் உடனான கடல் வாணிபத்தை மீண்டும் வளரச் செய்தான்.

திரு. சாண்டில்யன் எழுதிய கடல்புறா என்ற நாவலைப் பற்றி என்னுடைய அடுத்த பதிவில் பகிர்கிறேன்.

2 comments:

  1. இவ்வளுவு அருமையான விவரங்கள் பகிர்ந்தால்தான் இப்போதைய தலைமுறையினர் தெரிந்து கொள்வார்கள்

    ReplyDelete
  2. தாங்கள் குறிப்பிட்டதைப் போல் இன்னும் இதுபோன்ற பதிவுகளை நிச்சயம் இவ்வலைப்பூவில் பகிர்ந்துகொள்கிறேன். வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ஐயா!

    ReplyDelete