பலாச்சுளைக் கணக்கு - கணக்கதிகாரம்

வ‌ழ‌க்க‌ம்போல‌ இணைய‌த‌ளத்தில் உலாவுகையில், 'கணக்கதிகாரம்' என்ற ஒரு த‌மிழ்க் க‌ணித‌ நூலின் பக்கங்க‌ளைப் ப‌டிக்க‌ நேர்ந்த‌து. இந்நூல் கொறுக்கையூரைச் சேர்ந்த காரி நாயனார் என்பவரால் எழுத‌ப்ப‌ட்ட‌து.

இதில் காணப்படும் கணித வழிமுறைகள் மக்களின் பொருட்சார்ந்த வாழ்க்கையில் தோய்ந்து, தினசரி உழைப்பின் பரிமாணங்களை கணக்கியல் ரீதியாக அணுகுபவை என்பது குறிப்பிடத்தக்கது. கணக்கதிகாரம் 1850 களில் இருந்து அச்சுப்பதிப்பாக வெளிவந்துள்ளது.

வலைப்பக்கத்தில் வாசித்ததை உங்க‌ளுட‌ன் இங்கு ப‌கிர்ந்துகொள்கிறேன். இணையதள வாச‌க‌ர்க‌ள் ஏற்க‌னவே இதைப் ப‌டித்திருந்தாலும் மீண்டும் இங்கு நினைவுகூறுகிறேன்.
 
ஒரு பலாப் பழத்தை அறுக்காமலே அதில் எத்தனை சுளை இருக்கிறது என்பதைக் கண்டறியும் வழி கொடுக்கப் பட்டுள்ளது.
     "பலவின் சுளையறிய வேண்டிதிரேலாங்கு
     சிறுமுள்ளுக்காம்பருக்கெண்ணி - யறுகாக
     ஆறிற்பெருக்கியே யைந்தினுகீந்திடவே
     வேறென்ன வேண்டாஞ்ச்சுளை"


அதாவது பலாப்பழத்தின் காம்பைச் சுற்றயுள்ள முற்களை எண்ணி அதனை ஆறால் பெருக்கினால் வரும் விடையை ஐந்தால் வ‌குத்தால் கிடைப்ப‌து அந்த‌ பலாவில் உள்ள‌ எண்ணிக்கையாகும்.

உதாரணம்:

காம்பைச் சுற்றியுள்ள சிறு முள்ளின் எண்ணிக்கை 100 எனில் 100 x 6 = 600     600 /5 =120 பலாச்சுளைகளின் எண்ணிக்கை = 120 ஆகும். உங்களுக்கு பொறுமை இருந்தால் பலாபழாத்தின் மேல் உள்ள சிறு முள்ளுகளை எண்ணி கணக்கு போட்டு பாருங்களேன்.............

Ref:

2 comments:

  1. நான் கொஞ்சம் வீக்குங்க...மேத்தமேடிக்ஸ்ல ...
    :-)

    ReplyDelete
    Replies
    1. படித்ததோடு சரி, நிஜத்தில் உறுதி செய்து பார்த்ததில்லை. வாசகர்கள் யாரேனும் சரிபார்த்துச் சொல்லவும்.

      Delete