தமிழில் தொகைச் சொற்களைப் பற்றிய பதிவு பின்வருமாறு;
தொகைச் சொல் என்பது என்ன?
தொகுத்தல் அல்லது விரித்தெழுதுதல். அதாவது பல கூறுகளை உள்ளடக்கிய ஒரு சொல் தொகைச்சொல் என்பதாகும். 
ஒரு/ஒரே சொல்லின் கீழ் அடங்கும் வரையறுக்கப்
பட்ட சில சொற்கள் தொகைச் சொற்கள் எனப்படும்.
தொகைச் சொற்களை எடுத்துக்காட்டுகளோடு இங்கு காண்போம்.
ஒன்று 
ஒருவன் - கடவுள் 
இருமை (இரண்டு)
இருவினை - நல்வினை, தீவினை
/   தன்வினை, பிறர்வினை 
இருதிணை - உயர்திணை, அஃறிணை
/ அகத்திணை, புறத்திணை 
இருசுடர் - சூரியன், சந்திரன்
இருவகை அறம் - இல்லறம், துறவறம்
இருபலன் - நன்மை, தீமை
மும்மை (மூன்று)
முக்கனி - மா, பலா,
வாழை 
மூவேந்தர்  - சேரன், சோழன், பாண்டியன் 
முக்காலம்  - நேற்று, இன்று, நாளை  
முத்தொழில் -  ஆக்கள், அழித்தல்,காத்தல் 
நான்கு 
நால்வர்  ,சுந்தரர்,
சம்பந்தர், மாணிக்கவாசகர் 
நாற்குணம் -  அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு  (பெண்) /  அறிவு,நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி (ஆண்)
நாற்பயன் - அறம், பொருள்,
இன்பம், வீடு 
ஐந்து 
ஐந்திணை  - குறிஞ்சி,
முல்லை, மருதம், நெய்தல்,பாலை (பாலை - குறிஞ்சியும் முல்லையும் திரிந்து  வெம்மையான நிலம்)
ஐந்திலக்கணம் -  எழுத்து, சொல், பொருள்,
யாப்பு, அணி
ஐம்பூதம் - நிலம், நீர்,
நெருப்பு, காற்று, ஆகாயம்
(வான்)
ஐம்பெரும்காப்பியம் - சிலப்பதிகாரம்,  மனிகீகளை,சீவகசிந்தாமணி,
வளையாபதி, குண்டலகேசி 
ஐம்புலன் - சுவை, ஒளி,
ஊறு (தொட்டு), ஓசை, நாற்றம்
ஐம்பொன்  - பொன்,
வெள்ளி, செம்பு, இரும்பு,
ஈயம் 
ஐம்பெரும் பாதகம்  - கொலை, களவு (கொள்ளை), கள்,
பொய், குருநிந்தை  
பஞ்சாங்கம் – திதி,
வாரம், நாள், யோகம்,
கரணம்
ஆறு  
ஆறு(அரு)சுவை -  இனிப்பு,கசப்பு (கைப்பு), உவர்ப்பு,
புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு
(காரம்)
ஏழு 
ஏழு பருவம் - பேதை, பெதும்பை, 
மங்கை, மடந்தை,  அரிவை,
தெரிவை,  பேரிளம் பெண் 
எழுபிறப்பு  -  தேவர், மனிதர் , விலங்கு,
பறவை, ஊர்வன,  பறப்பன,
தாவரம் 
எட்டு 
எட்டுத்திக்கு - கிழக்கு, மேற்கு,
தெற்கு, வடக்கு, வடகிழக்கு,
வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு
ஒன்பது 
நவதானியம் - நெல், கோதுமை,
உளுந்து, கொள்ளு, எள்,
பயறு, கடலை, துவரை,
அவரை 
நவரசம் -  நகை, அழுகை, இளிவரல் (இழிவு) , மருட்கை
(வியப்பு/குழப்பம்), அச்சம், வெகுளி
(கபடமற்ற), பெருமிதம் (யோகம்), உவகை (மகிழ்ச்சி), அமைதி (சாந்தம்)
நவரத்தினம் / நவமணி – வைரம்,
வைடூரியம், முத்து, மாணிக்கம்,
பவளம், கோமேதகம், இந்திரநீலம்,
மரகதம், புட்பராகம்
பத்து 
தசாவதாரம் – மீன்,
ஆமை, வராகம், நரசிங்கம்,
வாமனம், பரசிராமன், இராமன்,
பலதேவன், கண்ணன், கல்கி
பத்தழகு - சுருங்கச் சொல்லல்,  விளங்கச்  சொல்லல்,
நவின்றோர்க்கினிமை, நன்மொழி புணர்த்தல்,
ஓசையுடைமை, ஆழமுடைமை, உலகமலையாமை,
முறையின் வைத்தல், விழுமியது பயத்தல், விளங்கு உதாரணந்து ஆகுதல் 
No comments:
Post a Comment