படித்ததில் பிடித்தது - 2

பாரதியார் பாடல்கள் - 2

    த‌மிழ்நாடு

செந்த‌மிழ் நாடெனும் போதினிலே - ‍இன்ப‌த்
தேன் வ‌ந்து பாயுது காதினிலே - எங்க‌ள்
த‌ந்தைய‌ர் நாடென்ற‌ பேச்சினிலே - ஒரு
ச‌க்தி பிற‌க்குது மூச்சினிலே (செந்த‌மிழ்)

வேத‌ம் நிறைந்த த‌மிழ்நாடு - உய‌ர்
வீர‌ம் செறிந்த‌ த‌மிழ்நாடு - ந‌ல்ல‌
காத‌ல் புரியும் அர‌ம்பைய‌ர் போல் - இள‌ங்
க‌ன்னிய‌ர் சூழ்ந்த‌ த‌மிழ்நாடு (செந்த‌மிழ்)

காவிரி தென்பெண்ணை பாலாறு - த‌மிழ்
க‌ண்ட‌தோர் வையை பொருனை நதி -  என‌
மேவிய‌ யாறு ப‌ல‌வோடத் -  திரு
மேனி செழித்த‌ த‌மிழ்நாடு (செந்த‌மிழ்)

முத்த‌மிழ் மாமுனி நீள்வ‌ரையே - நின்று
மொய்ம்புற‌க் காக்குந் த‌மிழ்நாடு - செல்வ‌ம்
எத்த‌னையுண்டு புவிமீதே - அவை
யாவும் ப‌டைத்த‌ த‌மிழ்நாடு (செந்த‌மிழ்)

நீல‌த் திரைக்க‌ட‌ லோர‌த்திலே - நின்று
நித்தம் த‌வ‌ஞ்செய் கும‌ரிஎல்லை - வ‌ட‌
மால‌வ‌ன் குன்ற‌ இவ‌ற்றிடையே - புக‌ழ்
ம‌ண்டிக் கிட‌க்குந் த‌மிழ்நாடு (செந்த‌மிழ்)

க‌ல்வி சிற‌ந்த‌ த‌மிழ்நாடு - புக‌ழ்க்
க‌ம்ப‌ன் பிற‌ந்த‌ த‌மிழ்நாடு - ந‌ல்ல‌
ப‌ல்வித‌னமாயின‌ சாத்திர‌த்தின் - ம‌ண‌ம்
பாரெங்கும் வீசுந் த‌மிழ்நாடு (செந்த‌மிழ்)

வ‌ள்ளுவ‌ன் த‌ன்னை உல‌கினுக்கே - த‌ந்து
வான்புக‌ழ் கொண்ட‌ த‌மிழ்நாடு -  நெஞ்சை
அள்ளும் சில‌ப்ப‌தி கார‌மென்றோர் - ம‌ணி
யாரம் ப‌டைத்த‌ த‌மிழ்நாடு (செந்த‌மிழ்)

சிங்க‌ள‌ம் புட்ப‌க‌ம் சாவ‌க‌ - மாதிய‌
தீவு ப‌ல‌வினுஞ் சென்றேறி - அங்கு
த‌ங்க‌ள் புலிக்கொடி மீன்கொடியும் - நின்று
சால்புறக் க‌ண்ட‌வ‌ர் தாய்நாடு (செந்த‌மிழ்)

விண்ணை யிடிக்கும் த‌லையிம‌ய‌ம் - எனும்
வெற்பை ய‌டிக்கும் திற‌னுடையார் - ச‌ம‌ர்
ப‌ண்ணிக் க‌லிங்க‌த் திருள்கெடுத்தார் - த‌மிழ்ப்
பார்த்திவ‌ர் நின்ற‌ த‌மிழ்நாடு (செந்த‌மிழ்)

சீன‌ மிசிர‌ம் ய‌வ‌ன‌ர‌க‌ம் - இன்னும்
தேச‌ம் ப‌ல‌வும் புக‌ழ்வீசிக் - க‌லை
ஞான‌ம் ப‌டைத் தொழில் வாணிப‌மும் - மிக‌
ந‌ன்று வ‌ள‌ர்த்த‌ த‌மிழ்நாடு (செந்த‌மிழ்)

படித்ததில் பிடித்தது

பாரதியார் பாடல்கள் - 1
  
நாட்டு வணக்கம்

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
   இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தைய ராயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
   முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையி லாயிர மெண்ணம் வளர்ந்து
   சிறந்ததும் மிந்நாடே ‍- இதை
வந்தனை கூறி மனதிலிருத்தி என்
   வாயுற வாழ்த்தேனோ - ‍இதை
வந்தே மாதரம், வந்தே மாதரம்
   என்று வணங்கேனோ!

புரமோஷன் வாங்க ஏழு ஐடியாக்கள்

1. மேசையை எப்போதும் களோபரமாக வைத்திருங்கள். ஐந்தாறு பைல்கள் திறந்து கிடக்க வேண்டும். நடுவில் பேனாவைத் திறந்து போட்டிருக்க வேண்டும். மேசையின் இழுப்பறைகள் பாதி திறந்திருக்க வேண்டும். சாவி தொங்கிக் கொண்டிருக்க வேண்டும்.

2. போனில் உரக்க பேசுங்கள். ஐ சிம்ப்ளி கேனாட் டாலரேட் தட்’, டுமாரோ வில் பீ டூ லேட்போன்ற வாக்கியங்களை அழுத்தம் திருத்தமாக உச்சரியுங்கள். ஆங்காங்கே கொஞ்சம் ஹிந்தி, மலையாளம் கலந்து பேசுவது குணச்சித்திரத்தை மேம்படுத்தும். எதிராளியைக் காய்ச்சி வடிகட்டுற மாதிரி பேசுங்கள். இதைச் செய்கிற போது எதிர் முனையில் போன் வைக்கப் பட்டுவிட்டது என்பதை நிச்சயித்துக் கொண்டு செய்வது உடம்புக்கு நல்லது.

3. அலுவலகத்துக்குள் எப்போது நடந்தாலும் ஏதோ தீ விபத்து நடந்து விட்டது மாதிரி வேகமாக நடந்து செல்லுங்கள். நீங்கள் போவது காண்டீனுக்கு மசால் வடை சாப்பிடவோ அல்லது கார்டனிங் இல் வேலை செய்யும் பெண்ணை சைட் அடிக்கவோ கூட இருக்கலாம்.

4. மேற்சொன்ன தீ விபத்து நடைகளின் போது கையில் எப்போதும் ஒரு பைலோ, ரிஜிஸ்ட‌ரோ வைத்திருங்கள். அது காலி பைலாகவோ, அந்த ரிஜிஸ்தர் உங்கள் மகனின் மேப் டிராயிங் நோட்டாகவோ கூட இருக்கலாம்.

5. சாயந்திரம் ஐந்தரைக்குப் பிறகு உங்கள் பாசின் கேபினுக்கு முன்னால் குறுக்கும் நெடுக்கும் சும்மாவாவது நடந்து செல்லுங்கள்.

6. ஒரு வேளை அவர் ஏற்கனவே கிளம்பியிருந்தால் அவர் நம்பருக்கு போன் செய்து உப்புப் பெறாத விஷயம் எதற்காவது ஐடியா கேளுங்கள். ஆர் யு ஸ்டில் இன் தி ஆபிஸ்?’ என்று கேட்க வையுங்கள். அதற்கு பதிலாக, ‘யுஷுவலா கிளம்பற நேரமே இன்னும் வரலை சார்என்கிற ரீதியில் பதில் சொல்லுங்கள். முடிந்தால், ‘கேசவன் வேறே இன்னைக்கு வரலையா, நாளைக்கு ஆடிட் இருக்கே என்கிற மாதிரி யாரையாவது டிப்ளமேடிக்காக போட்டுக் கொடுங்கள்.

7. அடுத்த நாள் பாசுடன் பேசும் போது சம்பந்தமே இல்லாமல் நேத்து கூட சாயந்திரம் ஆறரை மணி இருக்கும், வெப் இந்தியா ஆளுங்க போன் பண்ணாங்கஎன்கிற மாதிரி அப்டேஷன்கள் கொடுங்கள். ஆறரை, ஏழு என்கிற இடங்களில் இழுத்து இழுத்து பேசுங்கள்.
(மின்னஞ்சலில் பெற்றது)

2010ல் இந்தியர்களால் Google -ல் அதிகம் தேடப்பட்டவை

  1. 2010 (லலித் மோடி, மேட்ச் பிக்சிங், சச்சின் டெண்டுல்கர்)
  2. MICROMAX மொபைல் (தோனி)
  3. FIFA (உலகக்கோப்பை கால்பந்து)
  4. ஷகீரா (வக்கா வக்கா உலகக்கோப்பை பாடல்)
  5. YOUTUBE
  6. GETJAR (மொபைல் download வலைதளம்)
  7. SAMSUNG (மொபைல்)
  8. ZEDGE (மொபைல் download வலைதளம்)
  9. கிரிக்கெட் ஸ்கோர்
  10. GOOGLE மொழிபெயர்ப்பு