2011

 இனிய புத்தாண்டு  நல்வாழ்த்துக்கள்


 வாழ்க வளமுடன்!

தமிழ் இணையக் கல்விக்கழகம்

http://www.tamilvu.org/

அறிமுகம்

உலகில் நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வாழும் தமிழர்கள் தங்களுடைய மரபுகளையும், விழுமியங்களையும், பண்பாட்டையும் பாதுகாக்க வேண்டும். இத்தேவையை நிறைவேற்ற அவர்கள் தங்கள் மொழி, கலை, இலக்கியம் இவற்றோடு நீங்காத தொடர்புடன் வாழ வேண்டும். உலகு தழுவி வாழும் தமிழ் மக்களின் பண்பாட்டுத் தேவைகளை மனத்திற்கொண்டு தமிழக முதல்வர் அவர்கள் 1999ல் நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டின் நிறைவு விழாவில், தமிழ் இணையப் பல்கலைக்கழகம் (த.இ.ப.) ஒன்று அமைக்கப்படும் என அறிவித்தார்.

அதை நிறைவேற்றும் வகையில் இத்தமிழ் இணையப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. த.இ.ப.ஆட்சிக்குழு ஒன்றால் வழி நடத்தப்பட்டு, ஒரு முழுநேர இயக்குநர் பொறுப்பில் செயற்பட்டு வருகின்றது. இது தற்போது தமிழ் இணையக் கல்விக்கழகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நோக்கம்

தமிழ் இணையப் பல்கலைக்கழகம் உலகு தழுவி வாழும் தமிழ் மக்கட்கும், தமிழில் ஈடுபாடு உள்ள மற்றையோர்க்கும், தமிழ் மொழியைக் கற்கவும், தமிழர் வரலாறு, கலை, இலக்கியம், பண்பாடு பற்றி அறிந்து கொள்ளவும், வேண்டிய வாய்ப்புகளை இணையம் வழியாக அளிக்கும் நோக்கத்தைத் தன்னுள் கொண்டது.

இந்த வலைதள மின்நூலகத்தின் பொருளடக்கம்  பின்வருமாறு:
  • நூல்கள் (LITERATURE):
Ø  இலக்கணம்
Ø  ச‌ங்க‌ இலக்கியங்கள்
Ø  ப‌தினெண்கீழ்க்க‌ண‌க்கு
Ø  காப்பிய‌ங்க‌ள்
                     ச‌ம‌ய‌ இலக்கியங்கள்
                     சிற்றில‌க்கிய‌ம்
                     நெறி நூல்க‌ள்
                     சித்த‌ர் இலக்கியங்கள்
                     20ம் நூற்றாண்டு இலக்கியங்கள் (கவிதை)
                     20ம் நூற்றாண்டு இலக்கியங்கள் (உரைந‌டை-‍சிறுக‌தை,  
                                                                                  புதின‌ம், க‌ட்டுரை)
                     நாட்டுப்புற இலக்கியங்கள்
                     சிறுவ‌ர் இலக்கியங்கள்  
  • அக‌ராதிக‌ள்(DICTIONARIES)
  • க‌லைக்க‌ள‌ஞ்சிய‌ம்(ENCYCLOPEDIA)
  • க‌லைச்சொல் தொகுப்புக‌ள்(TECHNICAL GLOSSARY)
  • சுவ‌டிக்காட்சிய‌க‌ம்(MANUSCRIPT GALLERY)
  • ப‌ண்பாட்டுக்காட்சிய‌க‌ம்(CULTURAL GALLERY)

இத்தகைய அரிய தமிழ்த்தொண்டு புரியும் அனைத்து த‌மிழர்களுக்கும்  - என் இனிய வாழ்த்துக்கள். இது, தமிழனாகப் பிறந்த நாம் அனைவரும் வாசம் செய்யவேண்டிய ஒரு வலைப்பக்கம்.

என்றும் நம்மால் இயன்றவரை தமிழ் மணம் பரவச்செய்தல் வேண்டும்.

மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்

PROJECT MADURAI - ஒரு அறிமுகம்

இது ஒரு உலகளாவிய தமிழர்கள் இணையம்வழி ஒன்றுகூடி தமிழ் இலக்கியங்களின் மின்பதிப்புக்களை உருவாக்கி அவற்றை இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் தமிழார்வலர்களும் இலவசமாக பெற வசதிசெய்யும் திட்டம்.

மதுரைத் திட்டம் எந்தவித அரசாங்க (அ) தனியார் நிறுவன உதவியின்றி, எந்தவித வியாபார நோக்கமுமின்றி நடைபெறுகின்ற ஒரு தன்னார்வ (voluntary) முயற்சி. 1998-ம் ஆண்டு தமிழர் திருநாள் (பொங்கல்) அன்று ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் இன்றும் தொடர்ந்து இயன்று வருகின்றது. உலகில் வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் முன்னூற்றுக்கு மேற்பட்ட தமிழர்களும் தமிழார்வலர்களும் ஒன்றுகூடி இத்திட்டத்தை நடத்தி வருகின்றனர்.

LIST OF WORKS:
http://www.projectmadurai.org/pmworks.html

இங்கு அனைத்து தமிழ் நூல்களும்/வாசிப்புகளும் pdf மற்றும் html முறையில் கொடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய அரிய தமிழ்த்தொண்டு புரியும் அனைத்து த‌மிழர்களுக்கும்  - என் இனிய வாழ்த்துக்கள்.

இது, தமிழனாகப் பிறந்த நாம் அனைவரும் வாசம் செய்யவேண்டிய ஒரு வலைப்பக்கம். என்றும் நம்மால் இயன்றவரை தமிழ் மணம் பரவச்செய்தல் வேண்டும்.

படித்ததில் பிடித்தது - 3

பாரதியார் பாடல்கள் - 3

          தமிழ்

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
   இனிதாவது எங்கும் காணோம்,
பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும்
   இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு
   வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம்
   பரவும்வகை செய்தல் வேண்டும்.

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்,
   வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல்,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,
   உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை,
ஊமைய‌ராய்ச் செவிட‌ர்க‌ளாய்க் குருடர்களாய்
   வாழ்கின்றோம் ஒரு சொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
   தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
   தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
   தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங் கதைகள்
   சொல்வதிலோர் மகிமை இல்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
   அதைவ‌ணக்கஞ் செய்தல் வேண்டும்.

உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
   வாக்கினிலே ஒளி யுண்டாகும்
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
  கவிப்பெருக்கும் மேவு மாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
  விழிபெற்றுப் பதவி கொள்வார்,
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
  இங்கமரர் சிறப்புக் கண்டார்.